நாடாளுமன்ற நேரத்தை காங்கிரஸ் கட்சி எதற்காக வீணாக்குகிறது நாடாளுமன்ற நேரத்தை காங்கிரஸ் கட்சி எதற்காக வீணாக்குகிறது என்று விளக்க வேண்டும் பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; சில்லறை வணிகத்தில்

அன்னிய நேரடிமுதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக நாடாளு மன்றத்தில் விவாதிப்பதற்கு வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எந்த விதியின் கீழும் அதனை விவாதிக்க காங்கிரஸ்_கூட்டணி தயாராக இல்லை.

காங்கிரஸ் கட்சியால் தான் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்க பட்டு வருகிறது. எதற்காக நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணாக்கு கிறார்கள் என்பதை அவர்கள் விளக்கவேண்டும். காங்கிரஸ்சால் தங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. எந்த வித கூட்டணி தர்மத்தையும் அவர்கள் கடைபிடிக்கவில்லை. சில்லறை வணிகத்தில் நேரடி அன்னியமுதலீடு அறிவிப்பு வந்தவுடன் திரிணமூல் காங்கிரஸ்கட்சி மத்திய அரசிலிருந்து விலகிவிட்டது. சமாஜவாதி, தி.மு.க, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இந்த முடிவுகுறித்து தங்களிடம் காங்கிரஸ் விவாதிக்கவில்லை என கூறியுள்ளன.

Leave a Reply