முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக பாஜக  உறுதுணையாக இருக்கும கா‌வி‌ரி ந‌தி‌ நீ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் தமிழக முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக பாரதிய ஜனதா உறுதுணையாக இருக்கும் எ‌ன பாஜக மா‌நில‌த் தலைவ‌ர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

இதுமேலும் அவர் தெரிவித்திருப்பதாவது , காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் நடை பெற்ற கர்நாடக, தமிழக முதல்வர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது அதிர்ச்சி தருகிறது .

இப்போது பேச்ச வார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகபோவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். அவரின் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக பாஜகி உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்.

பிரதமர் மன்மோகனசிங் தலையிட்டு உடனடியாக தீர்வுகாண வேண்டுமெனவும், இரு மாநில மக்களது உணர்வுகளோடு தொடர்புடையது என்பதால் கர்நாடகத்தில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சியினரும் தமிழக விவசாயிகளின் நலனைகருதி காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்த வேண்டும் என் கேட்டுக் கொள்கிறேன்.

காவிரி நதி நீர் பிரச்சனைக்கு வாஜ்பாய் கொண்டுவந்த தேசிய நதி நீர் திட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் அறிவிக்க வேண்டும் எ‌ன் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply