தேசிய நலனை விட சர்வதேச வியாபார மாபியாக்களின்  நலன்தான் முக்கியமா  சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய காங்கிரஸ் அரசின் முடிவை பா.ஜ.க., உளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தவேண்டும் என பா.ஜ.க.

தொடந்து வலியுறுத்தியதை தொடர்ந்து மக்களவையில் வரும் 4,5ந் தேதிகளிலும், ராஜ்யசபையில் 6,7ந் தேதிகளிலும் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம்நடத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது .

இந்நிலையில் இது குறித்து பா.ஜ.க. துணைத்தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தேசிய நலனை பாதுகாப்பதைவிட சர்வதேச வியாபார மாபியாக்களினுடைய நலனை பாதுகாப்பதே தனது தலையாயபொறுப்பு என மத்திய அரசு நினைக்கிறது. இதற்காக தேசியநலனை சமரசம் செய்துக்கொள்ளவும் மத்திய அரசு தயாராக உள்ளது.

வால்மார்ட் உள்ளிட்ட சங்கிலித் தொடர் வணிக வளாகங்களை அமைக்க அனுமதி தரும் மத்திய அரசின் முடிவுக்கு, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஐ.மு கூட்டணியில் அங்கம்வகிக்கும் ஆதரவு கட்சிகளும் எதிர்ப்புதெரிவித்துள்ளன.

தேசிய நலனுக்காக பாடுபடு பவர்கள் யார்? சர்வ தேச நலனுக்காக பாடுபவர்கள் யார்? என்பது நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கும் ஓட்டெடுப்பின் மூலமாக மக்களுக்கு தெளிவாக புரிந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply