அன்னிய முதலீட்டை எதிர்த்து பா.ஜ.க ,.வினர் விழிப்புணர்வு பிரசாரம் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என பாஜக தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. அன்னிய முதலீட்டால் ஏற்ப்பட கூடிய எதிர்மறை விளைவுகள் குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் பா.ஜ.க ,.வினர் பிரசாரம்செய்து வருகிறார்கள்.

இதன் ஒருபகுதியாக சென்னை சைதாப் பேட்டையில் பா.ஜ.க சார்பில் இன்று சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு எதிர்ப்புபிரசாரம் மற்றும் பேரணிநடந்தது.

இதை மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தொடங்கிவைத்தார். மாந்தோப்பு பள்ளி, மார்க்கெட்பகுதியில் பிரசாரம்செய்தனர். அன்னிய முதலீட்டால் உருவாகும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கடைகள்தோறும் வினியோகித்தார்கள்.

Tags:

Leave a Reply