நரேந்திர மோடி மேலும் உயர்ந்த பதவிக்கு வரவேண்டும்;  அத்வானி  குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வரும் 13, 17-ந் தேதிகளில் நடைபெருகிறது .இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் நரேந்திர மோடியின் வெற்றி உறுதியாகியுள்ளது

இந்நிலையில் பா.ஜ.க. பாராளுமன்ற தலைவர் சுஷ்மாசுவராஜ் கடந்த சனிக் கிழமை நிருபர்களிடம் பேசுகையில், நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர். அவருக்கு அந்த தகுதிகள் இருக்கிறது என்று கூறினார். இதை காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங் . சுஷ்மா சொல்வதை அத்வானி ஏற்றுக் கொள்வாரா என்று விமர்சித்தார்?

இதற்க்கு பதில் தரும் விதமாக அத்வானி பதில் தந்துள்ளார் . காந்திநகர் தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது மோடியை புகழ்ந்தார். அவர் மேலும் கூறியதாவது; நரேந்திர மோடி மேலும் உயர்ந்த பதவிக்கு வரவேண்டும் அப்போது அவரை மூத்த கட்சி தலைவர்கள் ஆதரிக்க வேண்டும் .

குஜராத்தை மிகப் பெரிய வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசென்ற பெருமை முதல்வர் நரேந்திர மோடியை தான் சேரும். முன்னர் குஜராத் காங்கிரஷின் . ஆட்சியில் இருந்தபோது மிகவும் பின்தங்கி இருந்தது. தற்போது வளர்ச்சியின் உச்சத்துக்கு சென்றுள்ளது.

இதுபோன்று எந்த மாநில முதல்வர் களும் செய்யாத சாதனையை மோடி செய்துள்ளார். வளர்ச்சியின் ரோல் மாடல் என்றால் அது நரேந்தி‌ர மோடிதான். ஒரு மாநில முதல்வர் எப்படி ஆட்சி நடத்தவேண்டும் என்பதனை இவரை பார்த்து மற்ற மாநிலமுதல்வர்கள் பின்பற்றவேண்டும். இம்மாநிலத்தில் கடலோர மீனவர்கள் பழங் குடியினரின் வாழ்வாதரத்திற்காக கொண்டு வந்துள்ள திட்டங்களால் இன்று குஜராத் மேன்மையடைந்துள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஷின் ஆட்சியில் ‌எங்கும் ஊழல்கள்தான் அதிகரித்துள்ளது. என்று அவர் பேசினார். இதன்மூலம் அத்வானிக்கும் மோடிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கிளப்பப்பட்ட பொய்ப்பிரச்சாரம் தர்ந்துள்ளது.

Leave a Reply