வறுமை, விலைவாசி உயர்வு மத்திய அரசின்  பரிசுகள்;  சுஷ்மா ஸ்வராஜ் வறுமை, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை மத்திய அரசு நாட்டுமக்களுக்கு தந்துள்ள பரிசுகள் என மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மாஸ்வராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது ; மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் வறுமையும், விலை உயர்வும் அதிகரித்திருக்கிறது . நாட்டில் வேலை வாய்ப்பின்மை நிலவுகிறது. இது தான் வாக்களித்த மக்களுக்கு மத்திய அரசு தந்துள்ள பரிசுகள்.

ஆகாயத்தில் 2ஜி அலைக்கற்றை ஊழல், பூமியில் காமன் வெல்த் விளையாட்டு ஊழல், பூமிக்கு அடியில் நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் என்று அனைத்து இடங்களிலும் ஊழல்செய்துள்ளது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு என்று பேசினார்.

Leave a Reply