இந்தியாவுக்கும் , பாகிஸ்தானுக்கும் இடையே பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியை ரத்துசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை நடத்துவோம் என ஸ்ரீராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட்போட்டி வருகிற 25ம்தேதி பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கிறது . இதை உடனே ரத்துசெய்ய வேண்டும். இல்லை எனில் நாங்கள் மிகதீவிரமாக போராட்டம் நடத்துவோம்.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளால் இந்தியாவில் இருக்கும் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானை நம்மண்ணில் கிரிக்கெட் விளையாட வாய்ப்புவழங்குவதை நாங்கள் ஏற்கமாட்டோம்.

இந்திய பொருளாதாத்துக்கும் , பாதுகாப்புக்கும் பாதிப்பை உருவாக்கும் செயல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டுவருகிறது. கிரிக்கெட் போட்டியை காண அந்நாட்டை சேர்ந்த 3,000 பேருக்கு விசாவழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது . அவர்கள் மூலம் கள்ள நோட்டு, போதைப்பொருள், கறுப்புபணம் போன்றவற்றை நம் நாட்டில் புழக்கத்தில்விட்டு விடுவார்கள். எனவே, இந்த போட்டியை ரத்துசெய்ய வேண்டும் என அறிவித்துள்ளார்.

Leave a Reply