நரேந்திரமோடிக்கு குஜராத் மக்களின் ஆதரவு மட்டுமே தேவை நரேந்திரமோடிக்கு குஜராத் மக்களின் ஆதரவு மட்டுமேதேவை. அமெரிக்கா ஆதரவு தேவையில்லை என்று பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் ஹூசைன் கருத்து தெரிவித்துள்ளது.

குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடிக்கு அமெரிக்கா விசா வழங்கக் கூடாது என்று அமெரிக்க எம்பி.,க்கள் 25 பேர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரிக்கு கடிதம் எழுதி யுள்ளனர். இந்நிலையில், இது குறித்து கருத்துதெரிவித்துள்ள பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் ஹூசைன், “இந்த விஷயத்தில் குஜராத் மக்கள் உரியபதிலை தருவார்கள் . இது மோடிக்கு எதிராக அவதூறு பரப்பும்செயல். இதை முறியடித்து மீண்டும் மோடி ஆட்சியில் அமர்வார்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பல்பீர் புஞ்ச் கூறுகையில், மோடிக்கு குஜராத் மக்களின் ஆசி மட்டுமேதேவை. அமெரிக்கா ஆதரவு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply