சென்னையிலிருந்துதான் புதிய ஒளி எழுந்து இந்தியா முழுவதும் பரவியாக வேண்டும் சென்னையிலிருந்துதான் புதிய ஒளி எழுந்து இந்தியா முழுவதும் பரவியாக வேண்டும். இந்த நோக்கத்தை மேற்கொண்டு நீங்கள் உழைத்து வர வேண்டும். அறிவாற்றலும் தூய்மையும் மிக்க ஒரு நூறு இளைஞர்கள் முன் வாருங்கள். நாம் இந்த உலகையே மாற்றி அமைக்கலாம்.

சென்னையைப் பற்றி எனக்கு எப் போதுமே மிகப் பெரிய நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவையே மூழ்கடிக்க இருக்கும் மிகவும் பெரிய ஓர் ஆன்மிகப் பேரலை, சென்னையி லிருந்தே கிளம்பி வரப் போகிறது. இந்த நம்பிக்கை எனக்கு உறுதியாக இருந்து வருகிறது.

சுயநலமற்றவர்களாகவும், முழு ஆற்றலையும் கொண்டு தேச முன்னேற்றத்திற்கு உழைக்கக் கூடியவர்களாகவும் உயிர் போகும் வரையிலும் பாடுபடத் தயாராக இருப்பவர் களாகவும் உள்ள எத்தனை பேரை சென்னை தந்துதவ தயாராக இருக்கிறது?

எதையும் உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புங்கள். இறைவன் நமது சார்பில் இருக்கிறான் என்ற உண்மையைப் புரிந்துகொள் ளுங்கள். எனவே, தைரியமுள்ள என் இளைஞர் களே! முன்னேறிச் செல்லுங்கள்! சென்னை மக்களாகிய உங்களிடம் நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

நீங்கள் உண்மையில் என் குழந்தைகள் என்றால், எதற்கும் பயப்படமாட் டீர்கள். சிங்கங்களாகத் திகழ்வீர்கள். இந்தியாவையும் உலகம் முழுவதையும் நாம் விழித்தெழச் செய்ய வேண்டும். கோழைத்தனம் கூடவே கூடாது. உயிரே போவதானாலும் நேர்மை யுடன் இருங்கள்.

நமது நாட்டிற்கு வீரர்களே தேவைப்படுகிறார்கள். வீரர்களாகத் திகழுங்கள்! என் நம்பிக்கை எல்லாம் சென்னை யிடமே இருக்கிறது. தங்கள் பணியைச் செய்து முடிப்பதற்கு நெருப்பில் குதிக்க வேண்டியது அவசியமானால், அப்படியே செய்வதற்கும் என் குழந்தைகள் தயாராக இருக்க வேண்டும்.

தைரியம் மிக்க என் இளைஞர் களே! நீங்கள் அனைவரும் மகத்தான காரியங்களைச் சாதிப்பதற்குப் பிறந்தவர் கள் என்று நம்புங்கள்.

வாழ்நாள் குறுகியது. ஒரு பெரிய காரியத்தின் பொருட்டு அதைத் தியாகம் செய்துவிடுங்கள்! நாட்டின் முன்னேற்றத் தின் பொருட்டு வேலை செய்யுங்கள்! வேலை செய்யுங்கள்!

சுவாமி விவேகானந்தர், விவேகானந்தர், தமிழ்நாட்டைச் சேர்ந்த தன்னுடைய சீடர்களுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இவை:

Leave a Reply