அயோத்தியில் ராமர்கோவில் கட்டகோரி இந்து முன்னணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 10.30 மணிக்கு 50 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த படுகிறது. இதில் சென்னையில் மட்டும் 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .

காஞ்சீபுரத்தில் சின்னகாஞ்சீபுரம் தேரடி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது . இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநகர பொதுச்செயலாளர் ஏடி. இளங்கோவன் தலைமை தாங்குகிறார். சென்னையில் மூலக்கடை, மணலி, ஓட்டேரி, ஆர்.கே.நகர், தி.நகர், போரூர், வடபழனி உள்ளிட்ட 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .

மூலக்கடையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு துணைதலைவர் செல்வக் குமார் தலைமை தாங்குகிறார். மணலிமார்க்கெட் பார்த்த சாரதி தெருவில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையிலும், ஆர்கே.நகர் கேஎன்எஸ். டிப்போ பகுதியில் பொருளாளர் பால்ராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

Leave a Reply