எண்ணிக்கையின் அடிப்படையில் வேண்டுமானால் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கலாம் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்த விவாதம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் அன்னிய முதலீடுக்கு ஆதரவாக 253 ஓட்டுககளும், எதிராக 218 ஓட்டுக்களும் கிடைத்தன. அதாவது எண்ணிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டது.

 

எப்.டி.ஐ,.க்கு ஆதரவாக உள்ள எம்பிக்களின் எண்ணிக்கை:

காங்கிரஸ்- 206
தி.மு.க- 18
மற்ற கூட்டணிக் கட்சிகள்- 30

ராஷ்ட்ரீய ஜனதா தளம்- 4
மதசார்பற்ற ஜனதா தளம்- 3

ஆக மொத்ததில் காங்கிரஸ் கூட்டணிக்கு 261 எம்.பி.க்கள் ஆதரவு இருந்தது.

 

எப்டிஐக்கு எதிரான எம்.பி.க்களின் எண்ணிக்கை:

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களின் எண்ணிக்கை- 152
இடதுசாரிகள்- 24
திரிணமூல் காங்கிரஸ்- 19
அ.தி.மு.க- 9
ஆக மொத்தம் எப்டிஐக்கு எதிரான எம்.பி.க்களின் எண்ணிக்கை 204

மேலும் 544 எம்பிக்களை கொண்ட அவையில் ஓட்டெடுப்பில் வெற்றி பெற 272 வாக்குகள் தேவை. இந்த எண்ணிக்கையில் அனைத்து எம்.பி.க்களும் அவையில் இருந்தால் தோர்ப்பது உறுதி ஆனால் என்ன செய்ய அனனைவரும் எதிர் பார்த்ததை போன்று , பகுஜன் சமாஜ் (21 எம்பிக்கள்), சமாஜ் வாடி (22 எம்பிக்கள்) வெளிநடப்பு செய்துவிட்டதால் அவையில் மொத்தமுள்ள எம்பிக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது . அதாவது வாக்கெடுப்பு நடந்தபோது அவையில் 471 எம்பிக்களே இருந்தனர் இந்த நிலையில் வாக்கெடுப்பில் அரசு வெல்ல 471ல் பாதி அளவான 236 வாக்குகள் இருந்தாலே போதும் என்ற நிலை உருவானது.இதில் 253 எம்.பி.க்களின் ஆதரவுடன் ஓட்டெடுப்பில் மத்திய அரசு எண்ணிக்கை அடிப்படியில் மட்டுமே வென்று விட்டது.

ஆனால் தார்மிக அடிப்படையில் மத்திய அரசு தோற்றுதான் உள்ளது, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும் என எதிர்க்கும் முலாயம்சிங் வெளிநடப்பு செய்கிறார், வெளிநடப்பு செய்வதும் அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக ஓட்டெடு போடுவதும் ஒன்றுதானே, வாயளவில் எதிர்ப்பு செயலளவில் ஆதரவா,

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம். பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு வந்தால் மாயாவதி , முலாயம் சிங் போன்றவர்களுக்கு கொண்டாட்டம். இறுதி வரை எதிர் தரப்பை சுத்தவிட்டு கறக்க வேண்டியதை கறந்து விடுவார்கள். இத்தனைக்கும் இவர்கள் பின்தங்கிய மக்களுக்காக போரடுகிரர்கலாம், 5 கோடி சிறு வியாபாரிகளும் இவர்களுக்கு பின்தங்கியவர்களாக தெரியவில்லை , வால்மார்ட் போன்றவர்களே இவர்களுக்கு பின்தங்கியவர்களாக தெரிகிறார்கள். இவர்களுக்கு சி.பி.ஐ.யின் மீது இருக்கும் பயம் கூட மக்களின் மீது இல்லை .

ஆகமொத்தத்தில் எண்ணிக்கையின் அடிப்படையில் வேண்டுமானால் காங்கிரசுக்கு வெற்றியாக இருக்கலாம். ஆனால் தார்மிக அடிப்படையில் பாஜக,.வுக்கே வெற்றி. அந்நிய முதலிடை தாங்களும் எதிர்ப்பதாக கூட்டத்தோட கூட்டமாக சில கருப்பு ஆடுகள் நடித்து கொண்டு இருந்தன . மக்களை ஏமாற்றி கொண்டும் இருந்தன . இப்போது ஓட்டெடுப்பு என்று வந்தவுடன் ஒரு கருப்பு ஆடு எதிர்முகாமுக்கு ஓடிவிட்டது . மற்ற இரண்டு ஆடுகள் வெளிநடப்பு செய்து விட்டது. மக்களின் மீது அக்கறை உள்ளவர் யார் என்று அடையாளம் காட்டிய விதத்தில் பாஜக,.வுக்கு வெற்றியே.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply