அயோத்தியில் ராமர்கோவில் கட்டக் கோரி  இந்து முன்னணியினர் தடையைமீறி ஆர்ப்பாட்டம் அயோத்தியில் ராமர்கோவில் கட்டக் கோரி நெல்லையில் இந்து முன்னணியினர் தடையைமீறி ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடத்திய 100 கணக்கானோரை காவல்துறை கைது செய்துள்ளது

அயோத்தியில் ராமர்கோவில் கட்ட கோரி நெல்லைசந்திப்பில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் செய்தது . இதில் 100 கணக்கானோர் கலந்து கொண்டனர் , இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்துமுன்னணி மாநில துணைதலைவர் விபி. ஜெயக் குமார் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது அயோத்தியில் ராமர்கோவில் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்காததால் . தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை காவல்துறை கைது செய்தது .

Leave a Reply