காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்  நர்ஹரி அமீன் பாஜக ,. வில்  இணைந்தார்  குஜராத் மாநிலத்தில் தேர்தல் நெருங்க நெருங்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் வரிசையாக பாஜக ,.வை நெருங்கி வர ஆரம்பித்து விட்டனர் . இந்த வரிசையில் புதிதாக நர்ஹரி அமீன் பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார்.

உள்கட்சி அதிருப்தியில் இருந்த நர்ஹரி அமீன் திடீர் என முதலமைச்சர் நரேந்திரமோடியை சந்தித்து தம்மை பாஜக,.வில் இணைந்துக் கொண்டார் .

குஜராத்தில் பட்டேல் சமூகத்தில் முக்கியத்தலைவராக நர்ஹரி அமீன் உள்ளார் . ஏற்கனவே பாஜக,.வுக்கு கேசுபாய் பட்டேலின் இழப்பை ஈடு செய்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது . இதனால் பட்டேல் சமூகவாக்குகள் குறையும் என்று கவலையில் இருந்த பா.ஜ,க,.வுக்கு தற்போது நர்ஹரி அமீன் கைகொடுத்துள்ளார்.

Leave a Reply