பிறகட்சிகளை போன்றே அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும்  உள்ளது பணத்தின் பின்னால் போகும் பிறகட்சிகளை போன்றே அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் உள்ளது அந்த கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் என சமூக ஆர்வலர் அன்னாஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல தொலைக் காட்சி சேனலுக்கு சமூக ஆர்வலர் அன்னாஹசாரே பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கெஜ்ரிவால் பேராசை பிடித்தவரா என கேள்வி கேட்டதற்கு, ஆமாம் என பதில் தந்தார் . கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்த கட்சி பதவிமூலம் பணம், பணம் மூலம் பதவி என்கிற பாதையில் செல்கிறது. அதனால் அவர்கள் பக்கமே போகமாட்டேன்.

கெஜ்ரிவால் சுய நலமில்லா சேவைசெய்பவர் என நினைத்தேன். ஆனால் அவருக்கு பதவிமீது எப்பொழுது பேராசை வந்தது என தெரியவில்லை. அரசியல்கட்சி துவங்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எப்படிவந்தது என்றே புரியவில்லை. கெஜ்ரிவாலின் அரசியல் ஆசையால்தான் அன்னா குழு உடைந்தது என்று வருத்ததுடன் தெரிவித்தார் .

Leave a Reply