நரேந்திரமோடி நினைத்ததை முடிப்பவர் ; சோமாபாய் மோடிகுஜராத் முதல்வர் நரேந்திரமோடி நினைத்ததை முடிப்பவர் , அவரை எந்த மாநில முதல்வர்களுடனும் ஒப்பிடமுடியாது. என அவரது அண்ணன் சோமாபாய்மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ,

நரேந்திரமோடி குஜராத்துக்காக உழைப்பதை வேறு எந்தமாநில முதல்வர்களுடனும் ஒப்பிடமுடியாது. மேலும் மோடி முதல்வராக செய்துவரும் பணியை குஜராத்தின் வேறு எந்த முதல்வர்களுடனும் ஒப்பிட்டுப்பார்க்கவே முடியாது. மக்களின் அமோக ஆதரவு அவருக்கு Iஇருக்கிறது . அதனால் மக்கள் அவரை 3வது முறையாக குஜராத் முதல்வராக்கி பார்ப்பார்கள்.

நரேந்திரமோடி சிறு வயதிலிருந்தே ஒழுக்கமானவராக இருந்தார் . அவர் எதையாவது செய்யவேண்டும் என முடிவுசெய்துவிட்டால், அதை எப்படியாவது செய்து விடுவார். சிறுவனாக இருக்கும் போதே மோடிக்கு பயம்கிடையாது. ஒருமுறை வெளியே சென்று விட்டு வீட்டுக்குவந்த மோடி வழியில் இருக்கும் குளத்தில் இருந்து ஒருசின்ன முதலையை தூக்கிக்கொண்டு வந்தார். ஆனால் அதை வீட்டில் வைக்கக்கூடாது என எங்கள் அம்மா கூறிவிட்டதால் அதை அவர் வளர்க்க வில்லை என்றார்.

Leave a Reply