நான் வர்த்தகர் அல்ல சமூக நலவிரும்பி நான் ஒரு நேர்மையான மனிதன்; அதனால் கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகுவது எனும் பேச்சுக்கே இடமில்லை என்று , பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி கருத்து தெரிவித்துள்ளார் .

டில்லியில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று ஏற்பாடுசெய்திருந்த

நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது கூறியதாவது: நான் வர்த்தகர் அல்ல; சமூக நலவிரும்பி. எனக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் எல்லாம் நிரூபிக்கப்படவில் லை.

எனக்கு எதிராக ஊடகங்கள் எந்தமுடிவுக்கும் வரமுடியாது. எனக்கு எதிராக, ஒரு வழக்குகூட, இதுவரை பதிவு செய்யப்பட வில்லை. மகாராஷ்டிராவில், நான் அமைச்சராக பதவி வகித்தகாலத்தில், எந்த ஒரு நிறுவனத்துக்கும் சாதகமாக செயல் பட்டதில்லை.

அடுத்த லோக்சபா தேர்தலுக்குப்பின், மத்தியில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும். தேர்தலில், பாரதிய ஜனதா 175 இடங்களுக்குமேல் பிடித்துவிட்டால், பலகட்சிகள் நாங்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தருவது நிச்சயம் என்று கட்காரி கூறினார்.

Tags:

Leave a Reply