கர்நாடக பாஜக,.வில் இருந்து எடியூரப்பா விலகியுள்ளார் . இதனை தொடர்ந்து பா.ஜ.க. எம்பி., எம்எல்ஏ.க்கள் யாரும் எடியூரப்பாவுடன் எந்ததொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என பாரதிய ஜனதா மேலிடம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், சமிபத்தில் தனது ஆதரவாளர்களுக்கு எடியூரப்பா விருந்து தந்தார் . இந்தவிருந்தில் சில பாரதிய ஜனதா பிரமுகர்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது இதனை தொடர்ந்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது , எடியூரப்பாவின் அனுதாபியான கூட்டுறவு துறை மந்திரி பி.ஜே. புட்டசுவாமி கேபினட் மந்திரி சபையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் . மேலும் எடியூரப்பா அனுதாபியும், பா.ஜ.க எம்பி.யுமான ஜிஎஸ். பசவ ராஜூம் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply