கட்சி கட்டுப்பாட்டை மீறிய எம்எல்ஏ.க்களின்  மீது நடவடிக்கை எடுப்பது பற்றி புதன்கிழமை முடிவு செய்யப்படும் கட்சி கட்டுப்பாட்டை மீறிய எம்எல்ஏ.க்களின் மீது ஒழுங்குநடவடிக்கை எடுப்பது பற்றி புதன்கிழமை முடிவு செய்யப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது கட்சியின் எச்சரிக்கையைமீறி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி பாஜக தலைமை டிசம்பர் 12ஆம் தேதி முடிவுசெய்யும் ” என்றார். பாஜக,.விலிருந்து விலகிய எடியூரப்பா ஞாயிற்றுக் கிழமை கர்நாடக ஜனதா கட்சி’யை (கேஜேபி) தொடங்கினார். இதுதொடர்பாக நடந்த பொதுக் கூட்டத்தில் பாரதிய ஜனதாவை சேர்ந்த 14 எம்எல்ஏ.க்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்படத்தக்கது

Leave a Reply