1..குஜராத்தில் “சாலைகள் சரியில்லை” என்று சோனியாகாந்தி சொல்லியுள்ளாரே?—

விமானத்திலேர்ந்து பார்த்தா அப்பிடித்தான் தெரியும்..இறங்கி வந்து கார்ல பிரயாணம் பண்ணச்சொல்லுங்க..ரோடு சிங்கப்பூர்ல இருக்கிறமாதிரி சும்மாசோறு போட்டு சாப்பிடர மாதிரி இருக்கும்

2.குஜராத்தை நாசகார சக்திகளிடமிருந்து விடுவியுங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்லியுள்ளாரே.?

12 வர்ஷத்துக்கு முன்பே குஜராத்த நாசகார சக்திகளிடமிருந்து விடுவிச்சாச்சு..ஒருவேளை மராட்டியத்திலேயோ அல்லது அஸ்ஸாமிலேயோ பேச வேண்டிய பேப்பரை மாத்தி எடுத்து வந்திருப்பார் போல..

3.மோடியின் ஆட்சியில் மைனாரிட்டிகளுக்கு பாதுகாப்பில்லை என்கிறாரே பிரதமர் மன்மோகன் சிங்?

முதல்ல இவரை ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுத்த அஸ்ஸாமில் மைனாரிட்டிகளுக்கு இவர் பாதுகாப்பு வழங்கட்டும்..

அப்புறம் மும்பையில் பேஸ் புக்கில் பால்தாக்கரேயை விமர்சித்த முஸ்லீம் மாணவியை கைது செய்து அவமதித்ததே காங்கிரஸ் அரசு.,,அப்பெண் விடுதலை ஆனவுடன் நேராக குஜராத்தான் எனக்கு பாதுகாப்பானது என அமதாபாத்துக்கு வந்து குடியேரினாளே அவளிடம் கேட்கச்சொல்லுங்கள்.

உலகத்திலேயே மைனாரிட்டிகளான குஜராத்தில் வசிக்கும் “பார்சி இனத்தவரை” போய் கேட்கச்சொல்லுங்கள்..அப்போதாவது மண்டுமோகன் சிங்குக்கு புரிகிரதா என பார்ப்போம்

4.குஜராத் வாக்களர்கள் மோடிக்கு எதிராக “ஒரு பக்கமாக ” அணி திரள்கிறார்கள் என காங்கிரஸ் கூறுகிறதே?

கேள்வியை கொஞ்சம் மாற்றிக்கேளுங்கள்..குஜராத்தில் ஏற்கனவே காங்கிரசுக்கு எதிராக –மோடிக்கு ஆதரவாக –80 சதவீத வாக்காளர்கள் அணிதிரண்டு விட்டார்கள்.

காங்கிஸ் கூட்டங்களில் ஆளே இல்லை.பயத்தில அலறும் காங்கிரஸ் மீதியுள்ள 20 சதவீதத்தையாவது தன் பக்கம் சேர்க்க முயற்சிக்கிரதா? என கேளுங்கள்,

நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்

Leave a Reply