மதுரையில் அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில்   குற்றப்பத்திரிகை  தாக்கல் பா.ஜ.க மூத்த தலைவர் எல்கே. அத்வானி சென்ற வருடம் அக்டோபர் மாதம் 27-ந்தேதி ஊழலுக்கு எதிரான யாத்திரையை தொடங்கினார். மதுரையிலிருந்து தென்காசி செல்வதற்காக அவர் புறப்பட்ட போது திருமங்கலம் அருகே தரைப் பாலத்தில் சக்திவாய்ந்த “பைப்” வெடிகுண்டு கண்டுபிடிக்கப் பட்டது. இதை உடனடியாக வெடிகுண்டு

நிபுணர்கள் செயலிழக்கசெய்தனர். இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து சிறப்பு புலனாய்வு காவல்துறைyயினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் . “பைப்” வெடிகுண்டில் சக்திவாய்ந்த “ஜெல்-90” ரக வெடிபொருட்கள் இருந்தன. இந்த வழக்கில் குற்றவாளிகளாக அப்துல்லா, இஸ்மத், ஹக்கீம், பிலால் மாலிக், போலீஸ்பக்ருதீன், முகமது ஹனிபா உள்ளிட்ட 6 பேர் சேர்க்கப்பட்டனர். இவர்களின் மீது வெடிபொருட்கள் தடுப்புசட்டத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு இஸ்மத், அப்துல்லா, ஹக்கீம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மற்ற மூன்று பேரும் தொடர்ந்து தலைமறைவாக இருந்துவருகிறார்கள்.

போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், முகமது ஹனிபா ஆகிய மூன்று பேருக்கும் வாரண்டு பிறப்பிக்கப்பட்டு நிலுவையிலுள்ளது. இந்நிலையில் பைப்வெடிகுண்டு வழக்கில் சிறப்பு புலனாய்வுபிரிவு காவல்துறை திருமங்கலம் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல்செய்துள்ளனர்.

இந்த குற்றப்பத்திரிகையில் சாட்சிகளின் வாக்கு மூலங்கள் மற்றும் 50 ஆவணங்கள் இணைக்க பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய ஹக்கீம், இஸ்மத் உள்ளிட்டோர் வெடி பொருட்களை ஆட்டோவில் ஏற்றிசெல்ல உதவியதாகவும், அப்துல்லா, போலீஸ் பக்ருதீன் ஆகியோர் வெடிகுண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெடிகுண்டு தயார்செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply