நாடு முழுவதும் நடந்த மனித உரிமை மீறல்களில் உ.பி  முதலிடம் நாடு முழுவதும் நடந்த மனித உரிமை மீறல்களில் உ.பி,. மாநிலம் முதலிடம்வகிப்பதாக உள்துறை அமைச்சர் ஆர்பிஎன்.சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; சென்ற வருடத்தில்

நாட்டிலேயே அதிகமான மனிதஉரிமை மீறல்கள் உபி.,யில் தான் நிகழ்ந்துள்ளன. உ.பி.,யில் 30,788,ம் ஹரியானாவில் 6,002, டெல்லியில் 5,558, ஒடிசாவில் 3,986, பீகாரில் 2,984 என நாடுமுழுவதும் நடந்த மனித உரிமைமீறல்கள் தொடர்பாக மனித உரிமை ஆணையம் 68,259 வழக்குகளை பதிவு செய்துள்ளது.

காவல்துறை அத்துமீறல்களிலும் உபி., முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு நாட்டில் நடந்த 22,908 காவல்துறையின் அத்துமீறல்களில் உத்தர பிரதேசத்திதல் 13,656, டெல்லி யில் 1,798, ஹரியானாவில் 1,554, பீகாரில் 801, ராஜஸ்தானில் 762, வழக்குகளும் பதிவாகியுள்ளன.

Leave a Reply