குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த ராகுல் காந்தி, ‘குஜராத் மாநிலம் எனது அரசியல் ஆசான் காந்தி பிறந்த பூமி என்பதை நரேந்திரமோடி நினைவில்கொள்ள வேண்டும்’ என கூறியிருந்தார்.

இதற்கு தக்க பதிலடி தந்து நரேந்திர மோடி பேசியதாவது , ‘காந்தியின் பாதையை கடைபிடிப்பதாக ராகுல்காந்தி கூறி வருகின்றார். சுதந்திரத்துக்கு பிறகு , காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும் என காந்தி விரும்பினார். அவரது விருப்பத்தை ராகுல்காந்தி நிச்சயமாக நிறைவேற்றுவார் என்றார்.

Leave a Reply