கரண்ட் கட்டால் கால் உடைபட்ட கல்யாண சுந்தரம் இது என்ன புது குண்டு?—முழுசா படியுங்க புரியும்..
கடந்த வாரம் கோவையில் எல்லா தொழில் அமைப்புக்களும் சேர்ந்து “மின் வெட்டுக்கு முடிவு கட்டும் ” கூட்டம் கூட்டினார்கள்..
நாங்களெல்லாம் ஒரே சந்தோஷத்துடன் மின் வெட்டுக்கு ஏதோ தீர்வு கிடைக்குமென்று, ஆசை ஆசையாய் கூட்டத்துக்கு போனோம்..

ஆரம்பிக்கும்போதே கூட்டத்தலைவர் வீசிய அஸ்திரம் “ச்ச்சே” என்று போய்விட்டது..

மின்வெட்டை நீக்க அரசை நிர்பந்திப்பார்கள்…தட்டிக்கேட்பார்கள்…என்று பார்த்தால்….”டோட்டல்…சரணாகதி..”
“சென்னையிலிருந்து கரண்டை பிடிங்கி …எங்களுக்கும் பிச்சை போடு”—என்கிற மாதிரி…”எல்லோருக்கும் சமமாக பிரித்துக்கொடு” என்ற ஒருவரி தீர்மானத்தில் பேசச்சொன்னார்கள்…

சுதந்திர போராட்டகாலத்தில் “வெள்ளையனை கண்ணில் விரல் விட்டு ஆட்டியது தொழிற் கூடங்களும் தொழில் அதிபர்களும்தான்”…இன்று ஏன் இந்த சரணாகதி…என்பது வியப்பாகவும் வருத்தமாகவும் இருக்கிரது..

இதில் மாறுபட்டவர்தான் என் அன்புத்தம்பி…நண்பர் “டேப்மா” கல்யாண சுந்தரம் அவர்கள். தொடர்ந்து திமுக ..அதிமுக அரசுகளின் மின்வெட்டை கடுமையாக எதிர்த்து குரல் எழுப்பி வந்தார்.

அவர் சேற்றில் மலர்ந்த செந் “தாமரை”—எந்த மின்வெட்டுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறாரோ அதே மின்வெட்டினால் அவர் கால் உடைந்தது..

திருப்பூரில் ஒரு பணி முடித்து நேற்று முந்தினம் இரவு அவரது காருக்கு திரும்பும் போது…”கும்மிருட்டுக்குள் மறைந்திருந்த 4 அடி ஆழ “டிச்”–சுக்குள் தடுமாறி விழுந்து அவரது காலை உடைத்து விட்டது மின்வெட்டு..
..
இந்த அரசு எதிர்த்துப் பேசினால் இதுவரை வழக்கு மட்டுமே போட்டு வந்தது..இப்போது

சாக்கடையை தூண்டிவிட்டு காலையும் உடைத்துவிட்டது.

மின்வெட்டு எதிர்ப்பாளருக்கும் இன்னும் என்னென்ன நடக்குமோ…பயமாய் இருக்கிறது..

நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்

Leave a Reply