மத்திய அரசு, பதவிஉயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை உடனே விவாதிக்கவேண்டும் என்று வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் முடங்கின. மக்களவையில் கேள்விநேரத்தின் போது இப்பிரச்சனையை பகுஜன் சமாஜ்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர்.

நிலக்காடி சுரங்கமுறைகேடு குறித்து விசாரணை நடத்தவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனைதொடர்ந்து மக்களவையில் கடும்அமளி ஏற்பட்டது. இதனையடுத்து மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோன்று மாநிலங்களவையிலும் பகுஜன் சமாஜ்_கட்சி தலைவர் மாயாவதி எழுப்பினர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனையடுத்து மக்களவைபோல் மாநிலங்களவையும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பகுஜன் சமாஜ்ஜின் செயற்பாட்டை பா.ஜ.க., கடுமையாக எதிர்த்துள்ளது. பகுஜன் சமாஜ், சமாஜ்வாதியினரின் இந்த செயற்பாட்டுக்கு பின்னால் காங்கிரஸசின் கரங்கள் உள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

Leave a Reply