டெல்லியில்  பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அன்னிய முதலீட்டை அடி யோடி அகற்றுவோம் டெல்லி சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு குறித்த குறுகிய கால விவாதம்நடந்தது. பேரவையின் எதிர்க் கட்சித் தலைவரும் பாஜக முக்கிய தலைவருமான விகே. மல்கோத்ரா பேசியதாவது :

வால்மார்ட், டெஸ்கோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களை சில்லரைவணிகத்தில் அனுமதித்தால், நகரில் இருக்கும் பத்து லட்சம் சில்லரை வணிகர்களின் 40 லட்ச குடும்பத்தினர் பாதிக்க படுவார்கள். எனவே மக்கள் விரோதமுடிவை அரசு கண்டிப்பாக மறுபரிசீலனை செய்யவேண்டும். மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தமுடிவை மாற்றுவோம். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அடி யோடி அகற்றுவோம் என்று மல்கோத்ரா கூறினார்.

Leave a Reply