பா.ஜ.க., வுக்கு பிரபல கிரிக்கெட்வீரர் இர்பான்பதான் ஆதரவு குஜராத்தில் சட்ட சபை தேர்தலில் பா.ஜ.க., வுக்கு பிரபல கிரிக்கெட்வீரர் இர்பான்பதான் ஆதரவு தெரிவித்துள்ளார். முதல்வர் மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் பதானும் பங்கேற்று பா.ஜ.க.,வுக்கு ஆதரவு தெரிவித்தார். குஜராத் மாநில சட்ட சபைக்கு இன்று முதல் கட்டமாக 87 தொகுதிகளில் தேர்தல்நடக்கிறது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் முடிவடைந்தது.

இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் நரேந்திரமோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சிறுமையினத்தவர் அதிகம் வசிக்கும் மத்திய குஜராத்தில் இருக்கும் பஞ்ச்மகால், தஹோத் மற்றும் படேல் இனமக்கள் அதிகம் வசிக்கும் ஆனந்த், ஹேதா, வதோதாரா உள்ளிட்ட பகுதிகளில் மோடி பிரசாரம் செய்தார் .

ஹேதா எனும் இடத்தில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பாஜக.தேர்தல்பிரசார மேடையில் மோடி பேசினார். அந்தமேடையில் பதானும் கலந்து கொண்டார். மோடி பேச்சைகேட்க வந்தவர்களை பார்த்து பதான் கைசைத்து பாஜக.வுக்கு ஆதரவுகோரினார்.

Leave a Reply