மே.வ.,கத்தின் நிதி நெருக்கடி முன்பே தெரிந்திருந்தால் ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருக்க  மாட்டேன் மேற்கு வங்காலத்தின் நிதி நெருக்கடி முன்பே தெரிந்திருந்தால், நான் ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருக்கவே மாட்டேன் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது மன வேதனையை வெளிபடுத்தியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது; இந்த மாநிலத்தை ஏலம்விட்டால் எடுக்க ஆள் இருக்காது என கூறும் அளவுக்கு நிதி நிலை இருக்கிறது என்று புலம்பித்தள்ளினார். இத்தனை நிதிநெருக்கடிக்கு மத்தியிலும், மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்களை தனது அரசு மேற்கொண்டு வருவதாக மம்தாபானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து கால்நூற்றாண்டுக்கு மேலாக நீடித்துவந்த இடதுசாரிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைக்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிட தக்கது.

Leave a Reply