இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கநினைப்பவர்கலே கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்க்கிறார்கள் இந்தியா வல்லரசாவதை விரும்பாதவர்களும் , உலகரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கநினைப்பவர்களும் தான் கூடங் குளம் அணு மின் நிலையத்தை எதிர்க்கிறார்கள் என இந்தியாவுக்கான ரஷியதூதர் அலெக்சாண்டர் கடாகின் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் 40-ம் ஆண்டு ரஷிய கலை விழாவை தொடங்கிவைத்து அவர் பேசுகையில், இந்திய, ரஷியகலாசாரம் பாரம் பரியமிக்கது. இதனால் தான் ஆண்டு தோறும் ரஷிய கலைவிழா நடத்தப்படுகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாம் யூனிட் மின்சார உற்பத்திக்கு தயாராக இருக்கிறது. அதேபோன்று இரண்டாவது யூனிட் அணுஉலை பணிகள் இன்னும் ஆறுமாத காலத்தில் முடிவடையும். கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்புதெரிவிப்பவர்கள், உலகரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கநினைப்பவர்கள் என்றார் அவர்.

Leave a Reply