இந்துசமய அறநிலைய துறைகள் அரசியல் சட்டத்துக்கு விரோதமான அமைப்புகள் என  கோரி வழக்கு தமிழகம், புதுவை , ஆந்திர மாநிலங்களில் இருக்கும் இந்து சமய அறநிலையதுறைகள் அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை என்று அறிவிக்ககோரிய வழக்கில், 3 மாநில அரசுகளுக்கும் “நோட்டீஸ்’ அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திரா, தமிழகம், புதுவை போன்ற மாநிலங்களில் செயல்படும், இந்துசமய அறநிலைய துறைகள், இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமான அமைப்புகள்’ என்று அறிவிக்ககோரி, உச்ச நீதிமன்றத்தில் இந்து தர்ம ஆச்சார்யசபா தலைவர், தயானந்த சரஸ்வதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், “அறநிலைய துறையின் கட்டுப் பாட்டில் இருக்கும் இந்து கோவில்களில், வழிபாடு, மதம் தொடர்பான செயல்களில், அறநிலைய துறையினர் தலையிடுகிறார்கள் . கடவுளின்பெயரில் வசூலிக்கப்படும் நிதி, அரசின் பிறதுறைகளுக்கு மாற்றிவிடப்படுகிறது. இதனால், கோவில்களிருந்து, அரசு வெளியேறவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய, உச்ச நீதிமன்ற , “பெஞ்ச்’ முன்பு , விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதொடர்பாக, 3 மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தர விட்டனர்.

Tags:

Leave a Reply