வரும் பாராளுமன்ற தேர்தலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த படுவதற்கு வாய்ப்பு இல்லை என பாஜக செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து கூறியதாவது:-

2014-ம் ஆண்டு வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாஜக.,வை சேர்ந்தவரே பிரதமர் வேட்பாளராக நிறுத்துப் படுவார். இதில் எந்தசந்தேகமும் இல்லை . ஏனெனில் பாஜக நாட்டின் ஒருமுக்கிய கட்சியாக இருக்கிறது . நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தபடுவது சம்பந்தமாக உரியநேரத்தில் விவாதிக்கப்படும். நாட்டுமக்களின் பெரும்பான்மையான ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கே உள்ளது என்றார்.

Leave a Reply