பாரதிய ஜனதா மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும்  அருண்ஜெட்லி  குஜராத்தில் பாரதிய ஜனதா மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என கட்சியின் மூத்த தலைவர் அருண்ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; முதல்வர் மோடியின்

ஆட்சி காலத்தில் குஜராத் மிக பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. மக்களின் வாழ்க்கைதரம் முன்னேறி உள்ளது. ஊழல் இல்லா நேர்மையான ஆட்சியை நரேந்திரமோடி வழங்கியுள்ளார்.

பாரதிய ஜனதா மீது குறைகூற காங்கிரசுக்கு எந்த பிரச்னையும் கிடைக்க வில்லை. அதனால் தான் தவறான தகவல்களை கூறி மக்களை திசைதிருப்பி அதன் மூலம் லாபம் அடையலாம் என நம்பிக்கையில் போட்டியிடுகிறது.காங்கிரசின் பொய்பிரசாரத்தை மக்கள் ஏற்கவில்லை. குஜராத்தில் பாரதிய ஜனதா மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும். ஐ மு.கூட்டணி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அதை உணர்த்தும் வகையில் தேர்தல் முடிவுகள் அமையும் என்று அருண் ஜெட்லி கூறினார்.

Leave a Reply