கர்நாடகாவில் பா.ஜ.க, அரசு நிறைவேற்றி உள்ள, பசுவதை தடைசட்டத்துக்கு, ஒப்புதல் வழங்க மறுத்து, கவர்னர் பரத்வாஜ் அதற்க்கு முட்டுக்கட்டை போடுவதால், அந்த சட்டம் அமலாவதில் சிக்கல் உருவாகியுள்ளது .

இந்திய பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் பசுக்கள் மிக முக்கியமான இடத்தைபெற்றுள்ளன. விவசாய நாடான இந்தியாவில், பசுக்களை பட்டினிபோட்டு விட்டு, எந்த விவசாயியும் சாப்பிடமாட்டான். ஆனால், இன்று, பசுவம்சமே அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல் பகுதிகளிலும், தொடர்ந்துநடக்கும் பசுவதையே, இதற்கு முக்கிய காரணம். இதனை தொடர்ந்தே சிலநாட்களுக்கு முன்பு , கர்நாடக மாநிலம் பெல்காமில் நடந்த, சட்ட சபை கூட்டத்தொடரில், பசு வதை தடுப்பு , பாதுகாப்பு மசோதாவுக்கு, ஒப்புதல் வழங்கப்பட்டது

இந்நிலையில் கவர்னர் பரத்வாஜ் பசுவதை தடைசட்டத்திற்கு, ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார். அதனால், அந்தச் சட்டம் அமலுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply