தாம் தவறு செய்து இருந்தால் ஆறு கோடி குஜராத்திகளிடமும் மன்னிப்புகேட்கிறேன் தாம் தவறு செய்து இருந்தால் ஆறு கோடி குஜராத்திகளிடமும் மன்னிப்புகேட்கிறேன் என அகமதாபாத்தில் நடந்த வெற்றி விழாவில் முதல்வர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

வெற்றி விழாவில் மேலும் அவர் பேசியதாவது , குஜராத்தில் புதிய

அத்தியாயம் உருவாக்க பட்டிருக்கிறது. நம் மக்கள் சாதிய அரசியலை நிராகரித்துள்ளனர் . இந்தவெற்றி ஆறு கோடி மக்களின் வெற்றி. இத்தனை ஆண்டு காலம் முதல்வராகயிருந்த தாம் தவறுசெய்திருந்தால் 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

அடுத்த 5 வருடத்தில் இன்னும் கடுமையாக உழைக்க உள்ளேன் . எது நல்லது என்பது மக்களுக்கு தெரிந்துள்ளது . நல்லாட்சி , பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் வாக்களித்துள்ளனர் என்றார் .

வழக்கமாக மோடி மேடையில் தாய் மொழியான குஜராத்தி மொழியில் தான் பேசுவார். ஆனால் இன்றைய கூட்டத்தி ஹிந்தி மொழியில் மோடி பேசி தனது பார்வை தேசியத்தின் பக்கம் திரும்பியுள்ளது என்பதை மறைமுகமாக சுட்டி காட்டியுள்ளார்.

Leave a Reply