நரேந்திர மோடி - வெற்றி மகத்தானது குஜராத்தில் டிசம்பர் 13 மற்றும் 17 தேதிகளில் நிகழ்ந்த தேர்தலில் நரேந்திர மோடி 3 ஆம் முறையாக வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.இந்த வெற்றி குஜராத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய எண்ணற்ற பணிகளுக்கு கிடைத்த மக்களின் அங்கீகாரமாகும்.

அவர் தேர்தலின்போது எந்த இலவசத்திட்டங்களையும் அறிவிக்கவில்லை; மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டங்களையே அறிவித்தார். காங்கிரஸ் இலவச லேப்டாப் போன்றவற்றை அறிவித்தது. ஆனால், மக்கள் நரேந்திர மோடிக்கே மீண்டும் வெற்றி மாலைச் சூட்டினார்கள். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை வீழ்த்த பல்வேறு முயற்சிகளைக் கையாண்டது. மாநிலத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியைக் குறைத்து மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்களை முடக்கப்பார்த்தத

கடந்த பல ஆண்டுகளாகவே 2002ல் நிகழ்ந்த குஜராத் கலவரத்திற்கு மோடிதான் காரணம் என்று காங்கிரஸ் திட்டமிட்டு மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் செய்துவந்தது. பணத்திற்கு விலைபோன் சில ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் மனித உரிமை ஆர்வலர்களையும் பயன்படுத்தி மோடியை குற்றம் சாட்டிவந்தது.அதன்மூலம் முஸ்லீம்கள் மத்தியில் அவர்மீது வெறுப்பை உண்டாக்கி அவரை ஒரு மதவெறியர்போல் சித்தரித்து அரசியல் ஆதாயம் அடைய நினைத்தது. ஆனால், இம்முயற்சியும் பலிக்கவில்லை.

மாநிலத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து முன்னேறி அதன் பலனை அனுபவித்த முஸ்லீம்கள் மோடியை ஆதரித்தனர், மத அடிப்படைவாதத்தில் ஊறியவர்கள் மட்டுமே காங்கிரசின் சதிக்குப் பலியாகினர். பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் போன்ற தேசியவாதத்தில் நம்பிக்கையுடைய முஸ்லீகள் மோடியை ஆதரித்து காங்கிரசின் பொய்யை தவிடுபொடியாக்கினர். மோடி அனைத்து கெட்ட நோக்கிலான பிரச்சாரத்தையும் முறியடித்து மீண்டும் வெற்றிவாகை சூடினார்.

பா.ஜ.க. வின் முன்னாள் முதல்வாரான கேசுபாய்ப் பட்டேலுக்கு ஆசை காட்டி அவரை தனிக்கட்சி துவக்க வைத்து, மறைமுகமாக அவரோடு கூட்டணியும் வைத்துக் கொண்டு மோடியை வீழ்த்த நினைத்தது காங்கிரஸ்.இதனால் நிகழ்ந்த ஓட்டுப் பிளவைப் பயன்படுத்தி காங்கிரஸ் கடந்த தேர்தலை விட ஒரு சில இடங்கள் கூடுதலாகப் பெற்றாலும் கேசுபாய்க் கட்சி பரிதாபமான படுதோல்வியைச் சந்தித்தது. மோடி அனைத்தையும் கடந்து மக்கள் ஆதரவோடு பெருவெற்றி பெற்றார்.

அவரது வெற்றி, தேச நலனில் அக்கறையுடையோர் பெருமைப்பட வேண்டிய வெற்றி; மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பவர்கள் வழிகாட்டியாய்க் கொள்ள வேண்டிய வெற்றி. தேசியவாதிகளின் வெற்றி. அவரது வெற்றி குஜராத்தின் வளர்ச்சிக்கு தொடர்கதையாகும்; இந்தியாவின் வளர்ச்சிக்கு முன்னுரை ஆகும்.

வளர்ச்சியடைந்த குஜராத்தின் 6 கோடி மக்கள் மீண்டும் மோடியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்; எங்கும் கோடி கோடியாய் இலட்ச்க்கணக்கான கோடியாய் ஊழல் மலிந்து போய்,வளர்ச்சிக்காக போராடிக் கொண்டிருக்கும் 120 கோடி இந்திய மக்கள் மோடியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நன்றி ; கு.காந்தி ராஜா, எண்ணூர், சென்னை 

Leave a Reply