என்க்கு தரப்பட்டுள்ள காவல்துறை பாதுகாப்பை விலக்கி கொண்டு பெண்களுக்கு முழுபாதுகாப்பு வழங்குங்கள் ‘ என பாஜக எம்பி தருண் விஜய், மத்திய உள் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேக்கு கடிதம் எழுதி உள்ளார்.

பாஜக.,வை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான தருண் விஜய்க்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பிலிருந்து வந்த மிரட்டலை தொடர்ந்து இவருக்கு கடந்த 5 வருடங்களாக மத்திய உள் துறை அமைச்சகத்தின் சார்பில் சிறப்புபாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய உள் துறை அமைச்சர் ஷிண்டேக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது , 23 வயது நிரம்பிய அப்பாவி_மாணவி ஓடும் பேருந்தில் கதறகதற பலாத்காரம் செய்யப்பட்டதுடன், துடிக்கதுடிக்க அவரை தூக்கிவீசிய கொடுமை எனது மனதை மிகவும் பாதித்துவிட்டது.

நாட்டையே வெட்கி தலை குனிய வைத்த இந்தசம்பவத்தை கண்டித்து பெண்களும் மாணவிகளும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.இந்நேரத்தில் தனிப்பட்ட எனக்கு பாதுகாப்புதேவையா என நியாயமான கேள்வி எழுகிறது . மனித_மிருகங்களாக நடமாடும் குற்றவாளிகளிடமிருந்து பெண்களை காப்பாற்ற வேண்டியபொறுப்பும் கடமையும் உங்களுக்கு உள்ளது . அதற்கு ஆதரவு தரவேண்டியது எனது தார்மீக பணி.எனவே எனக்கு வழங்கப்படும் பாதுகாப்பை நீங்கள் இன்றுடன் விலக்கிக்கொள்ள வேண்டும். அந்த காவல்துறையினரை பெண்களின் பாதுகாப்புக்கு பயன் படுத்தி கொள்ளவேண்டும் என்று கடிதத்தில் தருண் விஜய் கூறியுள்ளார்.

Leave a Reply