வெற்றி_என்ன தோல்வி என்ன

சிறிதும் அச்சம்_ எனக்கு இல்லை

கடமையின் வழியில் கடுகிச்செல்கையில்

இதுவோ அதுவோ எதுவும் சரி தான்

வரங்கள் எதுவும் நான் கேட் பதில்லை!

ஒருபோதும் தோல்வியை ஏற்பதில்லை

புதுப்பாதை வகுக்கத் தயக்கமில்லை

உச்சியில் எழுதிய எழுத்தினை மாற்றவே

தோல்வியை வீழ்த்தி நிமிர்ந்து நின்றிட

புதுக்கவிதை பாடி மகிழ்கின்றேன்!!

[1998 விடுதலைத் திருநாளன்று அன்றைய பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தேச மக்களுக்கு உரையாற்றுகையில் மேற்கோள் காட்டிய Geeth Naya Gaathaa Hoon என்ற கவிதையின் தமிழாக்கம். ]

வாஜ்பாய்யின் 89 வது பிறந்த தினத்தில் இதை படிப்பதில் மகிழ்வோம்

நன்றி ; அருண் பிரபு

Leave a Reply