இந்தியாவை சுற்றிலும் நான்கு திசைகளிருந்தும்  ஆபத்து அதிகரித்து வருகிறது சீனாவினால் மட்டும அல்ல இந்தியாவை சுற்றிலும் நான்கு திசைகளிருந்தும் இந்தியாவுக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது என்று ஆர்எஸ்எஸ்.அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

உபி.,யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் மேலும் பேசியதாவது:

நாளுக்கு நாள் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நம் நாட்டுக்கு பெரும் ஆபத்துதான். சீனா மட்டும் அல்ல அண்டை நாடான பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் நாலா புறங்களிலும் இந்தியாவுக்கு ஆபத்தை உருவாக்கும் போர்க்குணத்துடன் உள்ளன.

டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது நாட்டிற்கு துயரமான ஒன்று . தலை நகருக்கு இப்படி களங்கம் உருவாக்க பட்டது வேதனை தருகிறது . இதிலிருந்து டில்லி நகரில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பில்லை என்பது தெளிவாகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். என்று மோகன் பாகவத் கூறினார்.

Leave a Reply