நான்காவது  முறையாக முதல்வராக நரேந்திரமோடி இன்று பதவியேற்க்கிறார் நான்காவது முறையாக, குஜராத் மாநில முதல்வராக நரேந்திரமோடி இன்று பதவியேற்க்கிறார் . இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஒடிசா முதல்-மந்திரி பட்நாயக் , நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர்.

குஜராத் சட்ட சபைக்கு சமீபத்தில் நடந்ததேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றிபெற்று ஹாட்ரிக் அடித்தார் நரேந்திரமோடி. மேலும் நான்காவது முறையாக முதல்வர் பதவியிலும் அவர் அமர்ந்து புதியசாதனை படைக்கிறார். பதவியேற்பு விழா அனைவரும் காணும்வகையில்,அகமதாபாத் சர்தார்படேல் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் மோடிக்கும், அவரது அமைச்சர்களுக்கும் ஆளுநர் கமலாபெனிவால் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார். அத்வானி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பலரும் இதில் கலந்து கொள்கின்றனர்.

Tags:

Leave a Reply