பா.ஜ.கா.,வின் கௌரவத்தை காப்பாற்றியுள்ளேன் லோக் ஆயுக்தா சோதனையில் முறை கேடான எந்த ஆவணங்களும் சிக்காததால், நான் குற்ற மற்றவன் என்பது உறுதியாகி உ ள்ளது. இதன் மூலம் பா.ஜ.க.,வின் கௌரவத்தை காப்பாற்றி யுள்ளேன் என கர்நாடக துணை முதல்வரும், மாநில பா.ஜ.க தலைவருமான கேஎஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: தனியார் என் மீது அளித்த புகாரின்பேரில் லோக் ஆயுக்த காவல்துறை ,எனது வீடுகள், அலுவலகங்களில் சோதனைசெய்தனர். அப்போது எனது வீட்டில் ரூ. 10.5 லட்சம் ரொக்க பணம், ஒருகிலோ 900 கிராம் தங்க நகை, 37 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்துள்ளதாக_ தெரிவித்துள்ளார். இவைகளுக்கான கணக்கு களையும், வரிகளை செலுத்தியுள்ளேன். இதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. முறைகேடாக சொத்துசேர்ந்ததற்கான எந்த ஆவணங்களையும் கைப்பற்றவில்லை.

இதன் மூலம் பா.ஜ.க.,வின் மாநில தலைவர் என்ற முறையில் அதன் கௌரவத்தையும் காப்பாற்றியுள்ளேன். லோக் ஆயுக்தவின் மீது எனக்கு மிகுந்தமரியாதை உண்டு என்றார்

Leave a Reply