அனைத்து நதிகளை இணைக்க நடவடிக்கைளை   மேற்கொள்ள வேண்டும்  தேசிய அளவில் இருக்கும் அனைத்து நதிகளை இணைக்க நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நமது நாடு கண்ட

சிறந்தபிரதமர்களில் அடல்பிகாரி வாஜ்பாயும் ஒருவர். அவர்கண்ட மற்றொரு கனவு தேசிய அளவில் இருக்கும் அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்பது. கங்கை முதல் காவிரிவரை, கிழக்கு முதல் மேற்குவரை இருக்கும் அனைத்து நதிகளையும் இணைக்க திட்டமிட்டுட்டிருந்தார்.

அதை நிறைவேற்ற கடும முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்பே அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகநேரிட்டது. அந்த திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் காவிரி நதி நீர் பங்கீட்டில் பிரச்னை வந்திருக்காது. அண்டை மாநில சகோதரத்துவம் பாதிக்கப்பட்டிருக்காது. . எனவே வாஜ்பாயின் கனவுதிட்டமான தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல் படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.V

Leave a Reply