கற்பழிப்பிலும் வேற்றுமையை கண்டுபிடிக்கும் கருணாநிதி மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் டெல்லிக்கும், தமிழகத்துக்கும் ஏன் இத்தனை ஏற்றத்தாழ்வு? டெல்லியிலே கற்பழிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவிக்கு ஒரு நியதி?. கற்பழிக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்ட 13 வயதே நிரம்பிய ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த புனிதாவுக்கு ஒரு நியதியா?. தமிழ்ச்சாதி

என்பதால் புனிதாவின் கொலை சாதாரணமாகி விட்டதா?. என கருணாநிதி கேள்வி மேல் கேள்வியாக அடுக்கி கொண்டே போகிறாரே.

தமிழ் தாமரை டால்க்

வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பது என்பது இந்த பாரத தேசத்தின் பண்பாடு. கற்பழிப்பிலும் வேற்றுமையை கண்டுபிடித்து செய்தியில் வருவது இவரது பண்பாடு. ஆங்கிலேயன் கண்டு பிடித்த ஆரிய, திராவிட பொய்யயை திரும்ப திரும்ப சொல்லி அப்பாவி மக்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழ் , ஹிந்தி பிரச்சனையை கிழப்பி ஆட்சியை பிடித்தார். பொதுவாக வேற்றுமையை மட்டும் விரும்பியவர், தன குடும்ப ஒற்றுமையை மட்டும் வலியுறுத்தியதால் ஊழலில் அடிபட்டு சேர்த்த அனைத்தையும் இழக்கும் நிலையில் உள்ளார்.

இது வரைக்கும் எத்தனையோ எத்தனையோ அப்பாவி புனிதாக்கள் சிதைக்க பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்காத நீதி. அவர்களுக்கு கிடைக்காத நீதிக்கான போராட்டம் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு கிடைத்திருக்கிறது. இது ஒரு விதத்தில் மகிழ்ச்சிக்குரியது. இந்த மாபெரும் போராட்டம் வரலாற்று சிறப்பு மிக்க சட்டத்துக்கு வழிவகுக்கும் என்பதில் எந்த ஐயம்மும் இல்லை. இந்த சட்டம் கன்யாகுமரியில் இருந்து காஷ்மீர் வரைக்கும் உள்ள அனைத்து புனிதாக்களையும் பாது காக்கும் , இதில் பேதத்தையும் சாதியையும் சேர்ப்பது மடமை.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply