மணிப்பூரில்  நடிகை  மானபங்கம்  மத்திய அரசு தலையிட்ட வேண்டும் மணிப்பூரில் நடிகை ஒருவர் பொதுநிகழ்ச்சியில் மானபங்கம் செய்யப்பட்டார். அவரை மானபங்கம்செய்த நாகலாந்து தேசியசோசலிச கவுன்சில் தீவிரவாதி லிவிங்ஸ்டனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தலை நகர் இம்பால் உள்ளிட்ட மாநிலம்முழுவதும் போராட்டம் நடை பெற்றது. அப்போது காவல்துறையினர் நடத்திய

துப்பாக்கிசூட்டில் பத்திரிகையாளர் ஒருவரும் கொல்லப்பட்டார். இதைதொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது.

இப்பிரச்சினையில் மத்தியஅரசு தலையிட்டு, வன்முறையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக தலைவர் நிதின்கட்காரி பிரதமர் மன்மோகன் சிங் கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘மணிப்பூரில் ஆட்சியின் மீதும் நீதித் துறையின் மீதும் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படும்வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தவிஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தி, நிலைமை கை மீறி போய் விடாமல் கட்டுப்படுத்த வேண்டும்.

மணிப்பூர் காவல் துறை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினரின் கண்முன்னே நடிகை மானபங்கம் செய்ய பட்டிருக்கிறார். அவர்கள் அதைப் பார்த்து கொண்டு பேசாமல் இருந்துள்ளனர். குற்றவாளிகளை கைதுசெய்து வழக்கு பதிவுசெய்வதில் ஏற்படும் இந்த தாமதத்தால் நிலைமை மேலும்மோசமாகலாம்’ என கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply