தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து   ஜெயலலிதா  வெளிநடப்பு டில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் என்று வெளிநடப்பு செய்தார். இந்தகூட்டத்தில் தமக்கு பத்து நிமிடங்கள் மட்டுமே பேச நேரம் வழங்கப்பட்டது என்றும் இதுபோதாது என்றும் குறைபட்டு வெளி நடப்பு செய்வதாக அறிவித்தார்.

மற்ற மாநில முதல்வர்களுக்கு எல்லாம் 30 , 35 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பத்து நிமிடத்தில் எனது பேச்சை முடித்து கொள்ள மணி அடிக்கப்பட்டது. இது மிகப் பெரிய அவமானம், எனக்கு மட்டும் அல்ல தமிழ் நாட்டிற்கே , தமிழக மக்களுக்கே ஏற்பட்ட அவமானம். எதிர்ப்பு மாநில முதல்வர்ளுக்கு வழங்கப்படும் நேரம் மிககுறைவு. இவ்வாறு குரல் வளையை நெறித்து, கேவலப் படுத்துவது ஏன்? இதற்கு எங்களை அழைக்காமல் இருக்க வேண்டியதுதானே? என்று தெரிவித்தார்.

Leave a Reply