ஒருமுகப் படுத்தும் ஆற்றல் வளரவளர, அதிகளவில் அறிவைப்பெறலாம். ஏனென்றhல், இந்தவழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரேவழி. தாழந்த நிலையில் இருக்கும் செருப்புக்கு மெருகுபோடுபவன், மனதை அதில் அதிகம் ஒரு முகப்படுத்திசெய்தால், மேலும் சிறப்பாகச் செருப்புகளுக்கு மெருகுபூசுவான்.

மனதை ஒருமுகப் படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறப்பான முறையில் உணவு சமைப்பான். பணத்தை சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்தஒரு வேலையானாலும் மனதை ஒரு முகப் படுத்தும் ஆறறல் வளரவளர, மேலும் சிறப்பாக அந்தக்காரியத்தை செய்து முடிக்கலாம். இந்த ஒருகுரல், ஒரே தட்டுதல், இயற்கையின் கதவுகளைத்திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாயந் தோடச் செய்கிறது.

இந்துத் தத்துவங்கள், பொன் மொழிகள் , இந்து தத்துவம்

Leave a Reply