நிச்சயம் கோபம் வரத்தான் செய்யும் தேசிய வளர்ச்சி குழும கூட்டத்தில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கோபமாக வெளிநடப்பு செய்துள்ளாரே?. ஒரு மாநில முதல்வருக்கு பேச பத்து நிமிடம் போதுமா?.

தமிழ் தாமரை டால்க்

பொதுவாக தேச வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கியதுவம் வாய்ந்த இந்த கூட்டம் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் வரை நடந்தது உண்டு . ஆனால் நாட்டின் வளர்ச்சி விகிதம் தான் குறைந்து கொண்டே போகிறதே , எனவே பேசும் நேரத்தை குறைத்தால் என்ன? என நம்ம திட்ட கமிசன் அறிவுஜீவிகளுக்கு தோன்றி இருக்கலாம் எனவே குறைத்து விட்டார்கள்.

தங்கள் கட்சியின் தேசிய கூட்டத்தை நாள் கணக்கில் நடத்த தெரிந்தவர்களுக்கு. தேச வளர்ச்சியுடன் நேரடி தொடர்புடைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தை நடத்த நேரம் இல்லை. 35ந்து மாநில முதல்வர்களின் கருத்துக்களை கேட்டு 12ஆவது ஐந்தாண்டு திட்டத்துக்கு தேவையான முடிவுகளை எடுப்பதே இதன் நோக்கம். ஆனால் முடிவுகளை என்னவோ முன்பே எடுத்து விட்டு பெயரளவுக்கு பேச பத்து நிமிடத்தை ஒதுக்கி இருக்கிறார்கள்.

அங்கே என்ன கட்டுரை போட்டியா வைத்தார்கள் பத்து நிமிடத்தில் மணி அடிக்க, நாட்டின் வளர்ச்சியுடன் தொடர்புடைய இந்த கூட்டத்தை நடத்துவதற்கு கூட இவர்களுக்கு நேரம் இல்லை?. மாநில முதல்வர்களின் கருத்துக்களை கேட்தற்கு கூட இவர்களுக்கு நேரம் இல்லை?. இப்படியெல்லாம் கேள்வி மேல் கேள்வியாக கேக்கும் நமக்கே கோபம் வரும்போது ! . இந்த கூட்டத்துக்காக வாரக்கணக்கில் தயாராகி மணிகணக்கில் பயணம் செய்து பறந்து வந்தால் பத்து நிமிடத்தில் மணியடித்து போ என்கிறார்கள் நிச்சயம் கோபம் வரத்தான் செய்யும் .

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply