ஒரு நரேந்திரமோடியின் ஆட்சி மலரும் தமிழக பாரதிய ஜனதா தலைவராக, 2வது முறையாக, பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். வரும் 2014ம் லோக் சபா தேர்தலில், தமிழகத்திலிருந்து, பாரதிய ஜனதா எம்.பி.,க்களை பெறும் , ஒரு நரேந்திரமோடியின் ஆட்சி மலரும்,” என்று , அவர் கூறினார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; அடுத்த மூன்று வருடத்தில் , தமிழகத்தில்,பாரதிய ஜனதா முதல்நிலை கட்சியாகமாறும். இதைதான், 2009ம் ஆண்டு தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட போதும் தெரிவித்தேன் . அதற்கான, பயணத்தைதொடர்ந்தோம். தற்போது, அந்தபயணம் பாதியில் நிற்கிறது. நான் உறுதியாக கூறுகிறேன், அடுத்த 3 ஆண்டுகளில், தமிழகத்தில், பாரதிய ஜனதா கொடிகட்டி பறக்கும்.

45 ஆண்டுகள், தொடர்ந்து ஆட்சிசெய்யும் திராவிட கட்சிகளால், பிரச்னைகளை தீர்க்கமுடியவில்லை. ஆனால், 11 ஆண்டுகால ஆட்சியில், குஜராத்தை முதன்மை மாநிலமாக மாற்றியிருக்கிறார் நரேந்திரமோடி. தமிழகத்தில், நிலவும் பிரச்னை, பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால்தான் தீரும். இங்கும், ஒரு நரேந்திரமோடியின் ஆட்சி மலரும்.

வரும் தேர்தலில், தமிழகத்திலிருந்து, பாரதிய ஜனதா, எம்.பி.,க்களை பெறும். அதற்க்கு , முன்னோட்டமாக, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நல்லிணக்க பாத யாத்திரை நடத்தப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply