பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை  ஏற்படுத்த வேண்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்கக்கூடிய சிறப்பு நீதிமன்றங்களை மாவட்டங்கள் தோறும் தமிழக அரசு ஏற்படுத்தவேண்டும் என பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஞாயிற்றுக் கிழமை அவர் மேலும் தெரிவித்ததாவது:

தில்லியில் பாலியல் வன் செயலால் பாதிக்கப்பட்ட 23வயது மருத்துவ கல்லூரி மாணவி மரணத்தைத் தழுவியது, நமது நெஞ்சத்தை உருக்குவதாக உள்ளது.

உயிரிழந்த மருத்துவ கல்லூரி மாணவியின் குடும்பத்துக்கு பா.ஜ.க., ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

இளைஞர்களை சீரழிக்கும்வகையில் வெகுஜனத்தொடர்பு சாதனங்களில் வெளியாகிவரும் நிகழ்ச்சிகளை தகுந்த சட்டங்களின் மூலம் வரைமுறைப்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்.

பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களையும் விரைந்து விசாரிக்க கூடிய, குறிப்பிட்ட காலவரையறைக்குள் தீர்ப்பு வழங்க கூடிய வகையில் சிறப்பு நீதி மன்றங்களை மாவட்டந் தோறும் தமிழக அரசு ஏற்படுத்தவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply