டெல்லி மருத்துவ மாணவிக்கு நடந்தகொடூரம் நாட்டிற்கு ஒரு திருப்பு‌ முனையாக அமைந்து விட்டது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார் .

திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேலும் இது குறித்து அவர் பேசியதாவது ,

”நாட்டிற்கு பெரும் திருப்பு முனையாக அமைந்து விட்டது. டில்லி மாணவிக்கு நேர்ந்தகொடூரம், இதுபோன்ற சம்பவம் இனி வருங் காலத்தில் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஓட்டுமொத்த தேசத்து மக்களையும் கொந்தளிக்க வைத்து விட்டது.

பெண்களை சகோதரியாக, தாயாக, கருதும் எண்ணம் தோன்றவேண்டும். பாலியல் குற்றங்களை தடுக்க வலுவானசட்டம் கொண்டு வர வேண்டும். உயிரிழந்த மாணவிக்கு நாடு அஞ்சலி செலுத்துவ தோடு நிறுத்திவிடாமல், பெண்களை பாதுகாப்பதர்க்கான விஷயத்தில் மத்திய அரசின் செயல் பாடுகளில் மாற்றம்வேண்டும்” என தெரிவித்தார்

Leave a Reply