2012-13-ஆம் நிதியாண்டிலும் அரசின் நிதிநெருக்கடி தொடரும் என்பதால் இவ்வாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தயார் செய்யும் மத்திய திட்டக்குழு திட்டச் செலவுகள் 15 சதவீத அளவிற்கு மட்டுமே அதிகரிக்கும் என கூறியுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டிற்கு பிறகு, திட்டச் செலவை குறைந்த அளவிற்கு அதிகரிப்பது இதுவே முதல் முறையாகும்.

நடப்பு நிதியாண்டில் செலவுகளை 20 சதவீத அளவிற்கு திட்டக்குழு உயர்த்தியிருந்தது. ஆயினும், 18 சதவீத உயர்வுக்கே அனுமதியளித்த மத்திய அரசு, இந்த திட்டச் செலவுகளை ரூ.4.42 லட்சம் கோடியாக நிர்ணயித்தது.

வரும் நிதியாண்டில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டவும், நிதி பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வந்து கடன் சுமைகளை குறைக்கவும் திட்டமிட்டுள்ள மத்திய அரசு நிதி நிலை அறிக்கையில் செலவுகளை பெருமளவுக்கு குறைக்க விரும்புகிறது.

Tags:

Leave a Reply