அதிகரிக்கும்  கற்பழிப்பு குற்றங்கள் பாரதம் எங்கே செல்கிறது ? வர வர கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறதே?. 20 நிமிடங்களுக்கு ஒரு கற்பழிப்பு நடப்பதாக கூறுகிறார்களே ?. டெல்லியில் இந்த வருடத்தில் மட்டும் 635 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்களே? . இதை முற்றிலும் நிறுத்த முடியுமா? இந்த பாரதம் எங்கே சென்று கொண்டிருக்கிறது…..

தமிழ் தாமரை டால்க்

இந்த பாரதம் எங்கேயும் செல்லவில்லை, இந்த பாரதத்தில் வசிக்கும் மக்கள் தான் தங்கள் அருமையான கலாச்சாரத்தை விட்டு விலகி சென்று கொண்டிருக்கிறார்கள் . கடவுள் விலங்குகளுக்கு பகுத்தறிவை தரவில்லை ஆனால் அவைகள் தங்களுக்குள் வகுத்து கொண்ட விதிகளை என்றும் மீறியதில்லை. கடவுள் மனிதனுக்கு மட்டும் பகுத்தறிவை தந்தான் , வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வதற்கு கீதை எனும் அருமையான விதியையும் தந்தான் ஆனால் மனிதனோ அதைவிட்டு விலகி சென்று கொண்டிருக்கிறான்.

தனது அண்ணி சீதையின் முகத்தை கூட பார்க்காத லக்ஷ்மனன்கள் வாழந்த தேசம். பிறன் மனை புகாமை அறம், பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை போன்ற சிறந்த கருத்துக்களை போதித்த மகான்கள் வாழ்ந்த தேசம். தனது மனைவியை தவிர மற்ற அனைத்து பெண்களையும் தாயாகவும் , சகோதரியாகவும் பாவிக்கும் தேசம் . தன்னை விட தனது அண்ணி பத்து வயது இளையவள் என்றாலும் அவளிடம் வணங்கி ஆசிபெறும் சிறந்த கலாச்சாரத்தை கொண்ட தேசம் நமது பாரத தேசம்.

ஆனால் இன்றோ டி.வி, சினிமா போன்ற ஊடகங்களில் அண்ணியையும் காம கண்ணோட்டத்துடன் பார்க்கும் காட்சிகளும் , ஒழுக்ககேடான காட்சிகளும் கருத்துரிமை என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதையெல்லாம் தொடர்து பார்ப்பவர்களின் மனநிலை, சிந்தனை எப்படி இருக்கும் ?.

இது ஒருபுறம் என்றால் மறுபுறம் மது எனும் அரக்கன் பெரும்பாலான இந்திய இளைஞர்களை ஆட்க்கொண்டு விட்டான. இந்தியாவை மது மயக்க தேசமாக்க வேண்டும் என்ற ஆங்கிலேயனின் நூற்றண்டு கனவு இன்று நிறைவேறி கொண்டிருக்கிறது. மதுவை மறைந்திருந்து அருந்த ஓடி ஒழிந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது . கூட்டாக ஓரிடத்தில் கூடி குடித்து கும்மாளமமிட்டு பெண்களை கேலி செய்யும் புதிய கலாச்சாரம் குடிபுகுநது விட்டது. இதன் உச்சம் தான் கூட்டு கற்பழிப்புகலும், பலாத்காரங்களும். இந்த கலாச்சாரத்துக்கு எல்லாம் அண்ணனாகிய அமெரிக்காவில் மட்டும் வருடத்துக்கு 1,88,380 பெண்கள் பலாத்காரங்களால் பதிக்க படுகின்றனர். கிட்டத்தட்ட இந்த கலாச்சாரத்துக்குள் மூழ்கிவிட்ட டெல்லி போன்ற நகரங்களில் 635 எனும் எண்ணிக்கையில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

காமகாட்சிகளும் , மது மயக்கங்களும், கடவுள் மறுப்பு கொள்கைகளும், கலாச்சார மீறல்களும் விஷ விருட்ங்களைத்தான் விதைக்கும் . இவற்றுக்கு கடிவாளம் இடுவதன் மூலம் கற்பழிப்பு, பலாத்காரங்களை முற்றிலும் நிறுத்திவிட முடியாது ஆனால் கட்டுபடுத்த முடியும்.

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னையின் வளர்ப்பினில் மட்டும் அல்ல அன்னை தேசத்தின் வழிகாட்டுதலிலும் இருக்கிறது.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply